வழிகாட்டி மையம்ஐயப்ப பக்தர்களுக்காக திறக்காதஅறநிலையத்துறை
தேனி: வீரபாண்டியில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஆண்டு தோறும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் திறக்கப்படும் வழிகாட்டி மையம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கிறார். பலர் வீரபாண்டி முல்லை பெரியாற்றில் குளித்து கவுமாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். பக்தர்கள் வழித்தடங்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ஆண்டு தோறும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் வழிகாட்டி மையம் துவக்கப்படும். இந்தாண்டு இதுவரை வழிகாட்டி மையம் துவக்கவில்லை. இதனை விரைவில் துவக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது பற்றி கோயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘ஆண்டு தோறும் வழிகாட்டி மையம் அமைப்பதற்கு உத்தரவு வழங்கப்படும். ஆனால், இதுவரை உத்தரவு வராததால் வழிகாட்டி மையம் அமைக்க வில்லை’, என்றனர்.