இடு பொருட்கள் வாங்க 24 கி.மீ. ,அலையும் விவசாயிகள்’வேளாண் விற்பனை மையம் வைகை அணைக்கு மாற்றி அலைக்கழிப்பு!
பெரியகுளம்; பெரியகுளத்தில் செயல்பட்ட வேளாண் விற்பனை நிலையம் வைகை அணைக்கு மாற்றியதால் விவசாயிகள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர். இடுபொருட்கள் வாங்க 24 கிலோ மீட்டர் சென்று வருவதால் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் தாலுகா விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி ஆகிய 4 ஊர்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் செயல்பட்டது. இதில் பெரியகுளம் வேளாண் விற்பனை நிலையம் வடகரை நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இங்கு விற்பனை நிலையம் செயல்பட்டதால் விவசாயிகள் இடுபொருட்களை வாங்கி எளிதாக விளை நிலங்களுக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது. இந்நிலையில் விற்பனை மையத்தில் நிலவிய பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இங்கு செயல்பட்ட விற்பனை மையத்தை கடந்தாண்டு 12 கி.மீ., தூரத்தில் உள்ள வைகை அணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பெரியகுளத்தில் இருந்து விவசாயிகள் வைகைஅணைக்கு சென்று இடு பொருட்கள் வாங்க சிரமம் அடைகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பணம்,நேரம் விரையம் ஏற்படுகிறது.
இதே போல் லட்சுமிபுரம் தேவதானப்பட்டி பகுதி விவசாயிகள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடுகபட்டி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் விற்பனை நிலையத்தில் பெறுகின்றனர்.
தேவதானப்பட்டியில் இடுபொருள் விற்பனை மையம் கட்டுமானப்பணி முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் தேவதானப்பட்டி விவசாயிகள் வடுகபட்டிக்கும் அலைக்கழிப்படுவது தொடர்கிறது. அந்தந்த பகுதி விவசாயிகள் அலைக்கழிப்பு இல்லாமல் அவர்களுக்கு அருகிலேயே இடுபொருட்கள் விற்பனை மையம் அமைக்க வேளாண்மை உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.
பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்,’பெரியகுளம் நகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை விற்பனை மையத்திற்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வாடகை பாக்கி ரூ.6 லட்சம் செலுத்தி விட்டனர். என்ன காரணத்தினாலோ வைகைஅணைக்கு மாற்றியுள்ளனர்.
வேளாண் விற்பனை நிலையத்திற்கு கட்டடடம் மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் குறைந்த வாடகையில் வழங்க தயாராக உள்ளோம் என்றார். வேளாண்மை உதவி இயக்குனர் ரேணுகா கூறுகையில்: ஒருங்கிணைந்த வளாகமாக பார்த்து வருகிறோம் என்றார்.-
பெரியகுளம் தாலுகா விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி ஆகிய 4 ஊர்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் செயல்பட்டது. இதில் பெரியகுளம் வேளாண் விற்பனை நிலையம் வடகரை நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.