Wednesday, April 16, 2025
Uncategorized

ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறைரூ.26.80 லட்சத்தில்

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டு துவாரகா நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களில் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.26.80 லட்சம் செலவில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது.

புதிய வகுப்பறைகளை மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ பள்ளி வகுப்பறையை திறந்து வைத்து மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜய், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர் காசிநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *