கார் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் சிறுவன் பலி
கம்பம்,: தேனி மாவட்டம், கம்பம் பைபாஸ் ரோட்டில் கார் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் பலியானார்,
பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் மஞ்சுநாதா 45, இவர் தனது மகன் சித்தார்த் 8, சேலம் ஒமலூரை சேர்ந்த உறவினர்கள் சிவக்குமார் 43, கார்த்திக் 40, புவனேஷ்வரன் 42, ஆகியோருடன் நவ.,20ல் சபரிமலை சென்றனர். நேற்று முன்தினம் காலை ஊர் திரும்பினர்.
காரை கார்த்திக் ஒட்டினார். கம்பம் பைபாஸ் ரோடு மணி கட்டி ஆலமரவிலக்கில் இரவு 11:00 மணியளவில் வந்த போது கார்த்திக் கண்ணயர்ந்து விட்டார். இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த சித்தார்த் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். மற்ற நால்வரும் சிறு காயங்களுடன் தப்பினர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.