Wednesday, April 16, 2025
Uncategorized

கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்து , மாத்திரைகள் வினியோகம்

கம்பம்: கால்நடை மருத்துவமனைகள்,மருந்தகங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளதால் தடுப்பாடு நீங்கி கால்நடை வளர்ப்போர்களும்,, டாக்டர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாளாகும். மாநில அளவில் பால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இடம் பெறும் மாவட்டமாகும். எனவே, இங்கு கால்நடை பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. தேனி, பெரியகுளம் மற்றும் போடியில் கால்நடை மருத்துவமனைகளும், 52 மருந்தகங்களும், 48 கிளை நிலையங்கள் உள்ளன. ஆனால் போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள், பணியாளர்கள் இல்லை.

இந்நிலையில் பல மாதங்களாக கால்நடை மருத்துவமனைகள்,மருந்தகங்களுக்கு மருந்து, மாத்திரைகள், குளுகோஸ், தடுப்பூசிகள் சப்ளை இல்லாமல் இருந்தது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருந்தனர். இந் நிலை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக தற்போது இரண்டு தவணைகள் மருந்து மாத்திரைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கால்நடை டாக்டர்களும், கால்நடை வளர்ப்போடும் நிம்மதியடைந்துள்ளனர். ஆண்டிற்கு 4 முறை மருந்து மாத்திரைகள் அனுமதிக்கப்படும் என்றும், கடந்த பல மாதங்களாக அனுமதிக்காமல் இருந்த மருந்து மாத்திரைகள் தற்போது தேவையான அளவிற்கு கொடுத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *