அலைபேசி டவரில் பேட்டரிகள், ஜெனரேட்டர் திருட்டு
தேனி; பழனிசெட்டிபட்டியில் அலைபேசி டவரில் இருந்த ரூ.17.96 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகள், ஜெனரேட்டர், மின்சாதனங்களை திருடு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ரோட்டில் உட்கட்டமைப்பு நிறுவனம் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் அலுவலராக ஜெயக்குமார் 39, பணிபுரிகிறார். இவரது நிறுவனம் சார்பில்,பழனிசெட்டிபட்டி பாரதி தெருவில் வசிக்கும் சத்தியமூர்த்தியின் காலியிடத்தில் ரூ.9765 மாத வாடகை வழங்கி, அலைபேசி டவர் அமைத்தார். அதில் பேட்டரிகள், ஏ.சி., ஜெனரேட்டர்கள், மின்சாதனங்கள் பொறுத்தப்பட்டு இயங்கி வந்தது. இங்கு அரப்படித்தேவன்பட்டி டெக்னீஷீயன் முத்துக்குமார் பராமரித்து வந்தார். 2023 மார்ச் 31ல் சென்று பார்த்த போது ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 715 மதிப்புள்ள பேட்டரிகள், ஏ.சி. ஜெனரேட்டர்கள், மின்சாதனங்கள் காணவில்லை. இதனால் ஜெயக்குமார் புகாரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.