விபத்தில் டிரைவர், கண்டக்டர் காயம்
தேனி : கம்பம் வடக்குபட்டி குரங்குமாயன் தெரு ரிஞ்சு 23. தனியார் பஸ் கண்டக்டர். கோபிநாத் அதே பஸ்சில் டிரைவராக உள்ளார். இருவரும் பணிமுடித்து தேனியில் இருந்து டூவீலரில் கம்பம் சென்றனர். பைபாஸ் ரோட்டில் வீரபாண்டி அருகே சென்ற போது கேரள மாநிலம் திருச்சூர் ஜஸ்டீன் ஓட்டி வந்த கார், டூவீலரில் மோதியது.
ரிஞ்சு, கோபிநாத் காயமடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.