மகளிர் ஆணையம் அதாலத்
மூணாறு: மூணாறில் மகளிர் ஆணையம் சார்பில் அதாலத் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., வக்கீல் எலிசபத்மாமன்மத்தாயி தலைமையில் வக்கீல் மாயாராஜேஷ் உள்பட பலர் புகார்களை விசாரித்தனர்.
51 புகார்களில் 15 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. மாவட்ட சட்ட உதவி ஆணையத்திற்கு இரண்டு புகார்கள் பரிந்துரைக்கப்பட்டன. எஞ்சிய புகார்கள் குறித்து விசாரணை அடுத்த அதாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.