தாலுகா அலுவலகத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்
போடி : போடி தாலுகா அலுவலகத்தில் குடிநீருக்கான சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாடு இன்றி உள்ளதால் குடிநீருக்காக மக்கள் தவித்து வருவது தொடர்கிறது.
போடி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், டொம்புச்சேரி, குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் போடி தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர். தங்களுக்கு தேவையான வருமானம், இருப்பிடம், சாதி, ஆதார் அட்டை உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு ரூ.பல ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வாங்கப்பட்டது. சில நாட்கள் மட்டும் செயல்பட்ட நிலையில் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அருகே உள்ள ஓட்டல். வீடு, பெட்டிக் கடைகளை நாடி செல்ல வேண்டும் நிலை உள்ளது.
மக்களின் தாதத்தை போக்க பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.