கடமலை- மயிலையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
வருசநாடு, டிச.4: மயிலாடும்பாறையில் நேற்று கடமலை-மயிலை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சேகரன், ஒன்றிய ஆணையர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் 10 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. பின்னர் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பேசிய ஒன்றியக்குழு தலைவர், நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கவுன்சிலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.