Sunday, May 11, 2025
மாவட்ட செய்திகள்

கோத்தலுாத்து ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து ஊராட்சி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார்.

இக் கிராமத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர். கதிர்நரசிங்கபுரம் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார். முகாமில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன், தனித்துணை ஆட்சியர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சாந்தாமணி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, ஆண்டிபட்டி தாசில்தார் ஜாகீர், பி.டி.ஓ.,க்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *