மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டி : பெரியகுளம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஜெயமங்கலத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமை வகித்தார்.
நகர செயலாளர் முகமது இலியாஸ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி உட்பட மாவட்ட நிர்வாகிகள், 100 நாள் பணியாளர்கள் பங்கேற்றனர்.
சில்வார்பட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.
பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பெரியகுளம் ஒன்றிய தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.
கம்பம்: தேனி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் உ . அம்மாபட்டி ஊராட்சியில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராயப்பன்பட்டியில் கிளை தி.மு.க. செயலாளர் திரவியம், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெப்ரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். சுருளிப் பட்டி , குள்ளப்பகவுண்டன்பட்டி, லெட்சுமி நாயக்கன்பட்டி , மேலச்சிந்தலச்சேரி, அப்பிப் பட்டி, காமாட்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.–