Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

தேனி : பெரியகுளம் கைலாசபட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் பொது மக்கள் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழிஏற்றனர்.

முன்னதாகவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைததார்.

சமபந்தி விருந்தில் பங்கேற்றார். நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு திட்ட மேலாளர் முகமது பரூக், துணை இயக்குனர் பிரகாஷ், மாவட்ட ரத்த மாற்று அலுவலர் அனுமந்தன், குழந்தைகள் நலக்குழு தலைவர் வனஜா, மாவட்ட மேற்பார்வையாளர் வைரவன், தொண்டுநிறுவனங்களின் இயக்குனர்கள் சைமன், முகமது சேக், அனஸ்தாசியா, மாவட்ட எச்.ஐ.வி., கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *