மின்சாரம் தாக்கி பெண் பலி
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே மந்திச்சுனையைச் சேர்ந்தவர் மணிகண்டன் 45, இவரது மனைவி லட்சுமி 45, இருவரும் கூலி வேலை செய்தனர். நேற்று முன் தினம் மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த லட்சுமி சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த டேபிள் பேன் சுவிட்ச்சை ஆன் செய்த போது இரும்பு கட்டில் மேல் விழுந்துள்ளது.
ஈரமான சுவரின் வழியாகவும் டேபிள்பேன் வழியாக இருப்பு கட்டிலில் பரவிய மின்சாரம் லட்சுமி உடலிலும் பாய்ந்தது.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சென்றவர்கள் லட்சுமியை மீட்டு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து கடமலைக்குண்டு எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.