விண்ணப்பங்களை ‘சூப்பர் செக்கிங்’ செய்ய முடிவு: ஜன. ,6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி தீவிரம்:
தேனி: தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தத்திற்கு விண்ணப்பித்த படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,)க்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சில விண்ணப்பங்களை உயர் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளனர். இதனை தொடர்ந்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர்பட்டியில் அக்.,29ல் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் வரைவு வாக்காளர்பட்டியலில் 5.49லட்சம் ஆண்கள், 5.74 லட்சம் பெண்கள் உட்பட 11.24 லட்சம் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர் நீக்கவும், முகவரி மாற்றம் செய்ய நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க அறிவுருத்தப்பட்டிருந்தது. இதற்காக நவ.,16,17,23,24 ஆகிய நாட்களில் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
இந்த முகாம்களில் வாக்காளர்பட்டியலில் பெயரை இணைக்க இளைஞர்கள் ஆர்வமாக விண்ணப்பங்களை அளித்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க 2635, நீக்குவதற்கு 1125, முகவரி மாற்றத்திற்கு 5625 மனுக்கள் வந்துள்ளன. அதே போல் முகாம்களில் நேரடியாக பெயர் சேர்க்க 13,905, நீக்குவதற்கு 4305, முகவரி மாற்றத்திற்கு 5918 பேர் என மொத்தம் 33,662 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது பி.எல்.ஓ.,க்கள் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து, அலைபேசி செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சில விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ‘சூப்பர் செக்கிங்’ செய்ய உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் முறையில் தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் எத்தனை படிவம் சூப்பர் செக்கிங் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து வழங்கும். 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ன்றனர்.