பாலத்தில் டூவீலர் மோதி கொள்முதல் பணியாளர் பலி
பெரியகுளம்: தேனி அருகே முத்துதேவன்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 38
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார்.
வேலை முடித்து விட்டு டூவீலரில் தேனிக்கு பைபாஸ் ரோட்டில் சென்றார். சருத்துப்பட்டி முனீஸ்வரன் கோயில் அருகே நிலைதடுமாறி பாலத்தில் மோதி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.