Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தென்னை மட்டையால் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு; 2 சிறார்கள் உட்பட 7 பேர் கைது

தேனி : தேனி பழனிசெட்டிபட்டி அணை கருப்பணசாமி கோயில் ஆற்றில் குளிக்கும் போது ஏற்பட்ட தகராறில், அதேப்பகுதியை சேர்ந்த தொழிலாளி தாமோதரனை 42, தென்னை மட்டையில் தாக்கியதில் இறந்தார். இது குறித்து 2 சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் போஜராஜ் மகன் தாமோதரன் 42. திருமணம் ஆகவில்லை. காலி மதுபாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்வார். நவ., 6ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள அணை கருப்பணச்சாமி கோயில் அருகே மயங்கிய நிலையில் காயங்களுடன் கிடப்பதாக, தாமோதரனின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்றவர் மகனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தார். தீவிர சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். ஆனால் போஜராஜ் வீட்டிற்கு அழைத்து வந்தார். மறுநாள் தாமோதரன் உயிரிழந்தார். மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் தாமோதரன் தாக்கி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் நாகராஜ், பாஸ்கரன் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடினர்.

இந்நிலையில் அணைக் கருப்பணசாமி கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 9 பேர் சென்ற வீடியோ பதிவு கிடைத்தது.

அதனை வைத்து அல்லிநகரம் கக்கன்ஜி காலனியை சேர்ந்த பிரவீன்குமார் 23, ஹரீஸ்பிரவீன் 19, விஜயபாரதி 19, அன்புச்செல்வம் 22, புவனேஸ்வரன் 18. 16 மற்றும் 17 வயது சிறார்கள், அருண்குமார், மாயக்கண்ணன் என 9 பேர் அணைக் கருப்பசாமி கோயில் பகுதியில் குளித்தனர். அங்கு குளிக்க வந்த தாமோதரன் மீது தண்ணீர் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டினார்.

இதில் கோபமடைந்த இளைஞர்கள் தென்னை மட்டை,கம்புகளால் தாமோதரனை தாக்கி காயப்படுத்தினர். இரு நாட்களுக்கு பின் தாமோதரன் இறந்தார்.

இவ்வழக்கில் அருண்குமார், மாயக்கண்ணன் இருவரும் தலைமறைவான நிலையில் சிறார்கள் இருவர் உட்பட 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *