குச்சனுாரில் ரூ.20 லட்சம் நிலுவை : 5 பேரூராட்சிகளில் குடிநீர் கட்டணம் வசூலிக்க சிறப்பு குழு
தேனி: மாவட்டத்தில் குடிநீர் கட்டணம் அதிகம் நிலுவையில் உள்ள பேரூராட்சிகளில், இதனை வசூலிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து குடிநீர் கட்டணம், சொத்துவரி வசூலிக்கப்படுகின்றன.
இதில் சில பேரூராட்சிகளில் குடிநீர் கட்டணம் வசூலிப்பதில் தொய்வு நிலவுகிறது.
இதனால் பேரூராட்சி நிர்வாகத்துறையினால் ரூ.10 லட்சத்திற்கு மேல் குடிநீர் கட்டணம் நிலுவையில் உள்ள 5 பேரூராட்சிகளில், அதனை வசூலிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் குடிநீர் கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆண்டிபட்டி, தேவாரம் தலா ரூ.10லட்சம், தேவதானப்பட்டி, தாமரைக்குளம் தலா ரூ.15லட்சம், குச்சனுார் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.