சுற்றுலா வாகனங்களை சோதனை செய்ய முடிவு
தேனி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டம் காட்டுரோடு, கெங்குவார்பட்டி வழியாக செல்கின்றனர். கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவில், கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் சுற்றுலா செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை நடத்தப்பட உள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களில் 5லி., கொள்ளளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட உள்ளது என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.