கஞ்சா வைத்திருந்தவர்கள் தேனி அருகே கைது
தேனி, டிச. 8: தேனி அருகே பூதிப்புரத்தில் மஞ்சிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ஒரு டெய்லர் கடை அருகே ஒருவர் கஞ்சாவுடன் இருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பழனிசெட்டிபட்டி போலீஸ் எஸ்.எஸ்.ஐ தங்கப்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கே மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த முனிராஜ் மகன் பாண்டியராஜ்(24) சந்தேகப்படும்படி நின்றிருந்ததை பார்த்த பழனிசெட்டிபட்டி போலீசார் வாலிபரிடம் சோதனையிட்டபோது, அவரிடம் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பிரபாகரனிடம் இருந்து வாங்கி விற்பனை செய்ய இருந்ததாக கூறியதையடுத்து, போலீசார் பாண்டியராஜை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் பிரபாகரன் தலைமறைவானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.