Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் எதிர்பார்ப்பு: வருசநாடு அருகே பழுதடைந்த சோலார் விளக்கு சரி செய்யப்படுமா?

வருசநாடு, டிச. 8: வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, மொம்மராஜபுரம், இந்திராநகர் கீழ பொம்மராஜபுரம், குழிக்காடு, நொச்சிஓடை, உள்ளிட்ட ஏழு மலை கிராம பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் இரவு நேரங்களில் தேர்வுகளுக்கு பயின்று வரும் சூழலில் மிகவும் பரிதாபத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அரிக்கன் விளக்குகளையும் மெழுகுவர்த்தி போன்ற விளக்குகளை பயன்படுத்தி கல்வி கற்று வருகிறார்கள். இதனால் கண்கள் கெட்டுப்போகும் சூழலில் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக் குழு தேனி மாவட்ட செயலாளர் அங்குசாமி கூறுகையில் எங்கள் மலைப்பகுதி பொதுமக்கள் மூன்று தலைமுறையாக இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் சோலார் விளக்குகளும் பழுதடைந்துவிட்டது. மேலும் மேகமலை ஊராட்சிக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்பு சோலார் விளக்குகள் கொடுக்கப்படவில்லை. மேலும் மழைக்காலங்களில் சோலார் விளக்குகள் பழுதடைந்துவிட்டது. இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடமும் ஒன்றிய நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *