Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் பேச்சு வணிகர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் *

தேனி: ‘தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் தாமாக முன்வர வேண்டும். மேலும் தாய்மொழி இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.’ என, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் இளங்கோ பேசினார்.

தேனி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை சார்பில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமை வகித்தார்.

அவர் பேசியதாவது: தமிழில் பெயர் பலகைகள் வைக்க வணிகர்கள் தாமாக முன்வர வேண்டும். பிற மொழிகள் தாய் மொழியை விட அளவில் சிறிதாக இடம் பெற வேண்டும். பலகையில் தமிழ்மொழி கட்டாயம் இடம் பெறுவதை வணிகர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பிற மாநிலத்தவர்கள் அதிகம் வரும் பகுதிகளிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும்., என்றார். தொழிலாளர் துறை உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் முன்னிலை வகித்தார். வையை தமிழ்ச் சங்க நிறுவனர் இளங்குமரன், வர்த்தகர்கள் ஆனந்தவேல், செல்வக்குமார், காளிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *