தேனியில் இருந்து டிச.12ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
தேனி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தேனியில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.,12 மதியம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ள மலையில் மகா தீபம் ஏற்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் திரள்வார்கள். இந்தாண்டு கார்த்திகை தீப திருநாள் டிச.13ல் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.,12 மதியம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் திண்டுக்கல், திருச்சி, திருக்கோவிலுார் வழியாக திருவண்ணாமலை செல்லும். பக்தர்களில் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும். தேனியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.346 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.