தேனி எம்.பி., தகவல் கேந்திர வித்யாலயா பள்ளி துவக்கப்படும்
தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், விரைவில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி., தங்கதமிழ்செல்வன் கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் தேசிய காசநோய் விழிப்புணர்வு வாகனத்தின் பிரசாரத்தை எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
எம்.பி., கூறியதாவது: தஞ்சை, தேனியில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேசி, விரைவில் வகுப்புகள் துவங்கப்படும். ஏற்கனவே இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு கொண்டு செல்லப்பட்ட தளவாட பொருட்களை கேரள வனத்துறை தடுத்து நிறுத்தியது தொடர்பாக கலெக்டரிடம் பேசினேன். கலெக்டர் கேரள அரசுடன் பேசி, அந்த வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். வாகனங்கள் செல்ல உறுதியான நடவடிக்கை மேற்கொள்வார்கள். இது தொடர்பாக நீர்வளத்துறையினரிடமும் கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார் என்றார்.
காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் ராஜபிரகாஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுபாடு திட்ட மேலாளர் முகமதுபாருக், தேனி உடனிருந்தனர்.