முகூர்த்தக்கால் நடும் விழா * முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு விழா துவக்கம்: சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்.10ல் நடந்தது.
அதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் வரலாற்று சிறப்பு பெற்றதாகும். பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றினார் என்பது தனிச் சிறப்பாகும். கடந்த 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின் நடக்க வில்லை. ஊர் முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களாக இருந்து திருப்பணிகளை துவக்கினர். மகா கும்பாபிஷேகம் வரும் பிப்.10ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் 31 யாக குண்டங்கள் அமைக்கப்படும் பணிகள் துவங்கியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ என, முழக்கமிட்டனர். நிகழ்வில் திருப்பணிக் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் பள்ளியின் தாளாளர் விரியன் சாமி, வர்த்தக சங்க மாநில நிர்வாகி பெருமாள், பொருளாளர் குமரேசன், செயலாளர் சிவராமன், மலைச்சாமி, மனோகரன், பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் அய்யம்மாள், வர்த்தக சங்கத் தலைவர் உதயகுமார், தவமணி ராமச்சந்திரன், தெய்வீக பேரவை பைரவர் வழிபாட்டு குழுவின் நிர்வாகிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா செய்திருந்தார். முகூர்த்த கால் சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் பாலசுப்ரமணியபட்டர், சந்தோஷ் பட்டர் செய்தனர்.