ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்க கோரிக்கை
தேனி: ஊரக திறனாய்வு தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசுஊரக திறனாய்வுத் தேர்வு(டிரஸ்ட் தேர்வு) நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச்செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:ஊரக திறனாய்வுத் தேர்வில்கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பாட ஆசிரியர்கள்,கணித, அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களே அவர்களுக்கு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.பல தேர்வு மையங்கள் நகராட்சிகளில் உள்ளன.
அப்பகுதியில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளியில் உள்ள தமிழ், ஆங்கில ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்க சி.இ.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.,என்றார்.