குப்பையில் மனுவை போட்டு ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் 8, 9, 13 வார்டுகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர் பேசினார். நிர்வாகிகள் வெற்றிவேல், நாகராஜ், அறிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுவரை வழங்கிய மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மனுவை குப்பையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.