புத்தகங்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடியது
பெரியகுளம்: ‘வாழ்வின் ஒவ்வொருவருக்கும் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடியவை புத்தகங்கள்’, என வேளாண் பல்கலை மாணவர் நல மேம்பாட்டு மைய முதல்வர் மரகதம் பேசினார்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இருதினங்கள் நடந்த புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: மாணவர்கள் இணையம், அலைபேசி வழியில் பாடங்களை படிப்பதை குறைத்து புத்தகங்களை வாங்கி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வின் ஒவ்வொருவருக்கும் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடியவை புத்தகங்கள். மாணவர்கள் கல்வி நூல்களை கற்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய போட்டி சூழலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போட்டித்தேர்வுகள், வேலை வாய்ப்பு, வெளிநாட்டில் மேற்படிப்பு போன்றவற்றில் வெற்றி பெறுவதற்கு
ஏற்ப புத்தகங்களை படிக்க வேண்டும் என்றார். முன்னதாக தோட்டக்கலைகல்லுாரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் முத்தையா, ராஜதுரை, குருநாதன், வெங்கடேசன், கல்லூரி நூலகர்கள் சங்கர், கருஇளஞ்சேரன், ஏற்பாடுகளை நூலக பொறுப்பாளர்கள் சக்திவேல், அழகர்சாமி, உதவியாளர் மணிமுருகன் செய்திருந்தனர்.-