மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு
தேனி : அல்லிநகரம் குள்ளம்மன் தெரு லலிதா 75. வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் கூரியரில் பார்சல் வந்துள்ளதாக தெரிவித்து குடிக்க தண்ணீர் கேட்டார்.
வீட்டிற்குள் தண்ணீர் எடுத்து வர லலிதா சென்றார். அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 3பவுன் தங்க செயினை பறித்து விட்டு, மூதாட்டியை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சென்றார்.
வீட்டருகில் இருந்தவர்களை ஜன்னல் வழியாக லலிதா கூப்பிட்டு கதவை திறந்தார்.
செயினை பறிப்பு குறித்து மூதாட்டி மகள் மைதலி, மருமகன் கிருஷ்ணஜோதியிடம் தெரிவித்தார். கிருஷ்ணஜோதி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.