மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் கலை நிகழ்ச்சி
மயிலாடுதுறை, மார்ச் 29: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தேவாரம் சிவதாண்டவம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு இயசை நாடக மன்றத்தின் சார்பில் கலைச் சங்கம நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பறை இசை, தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவாரப் பாடல்களுக்கு சிவதாண்டவம் கலைநிகழ்ச்சி, பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவற்றில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு நாடக பொம்மலாட்டக் கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள், நாடக நடிகர்கள், பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். கிராமிய கலை இலக்கிய மாவட்ட தலைவர் கிங் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்