தர்பூசணியில் வரைந்து அசத்தல் ‘செஸ்’ சாம்பியன் குகேஷ் உருவம்
தேனி : தேனியில், செஸ் சாம்பியன் ஆன வீரர் குகேஷின் உருவப்படத்தை தர்பூசணி பழத்தில் செதுக்கி காய்கறி சிற்பக் கலைஞர்கள் காட்சிப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் இரு நாட்களுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்றார். மிகவும் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவருக்கு முதல்வர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தேனி அல்லிநகரம் காய்கறி சிற்ப கலைஞர் இளஞ்செழியன் தர்பூசணி பழத்தில், குகேஷின் உருவத்தை செதுக்கி காட்சிப்படுத்தினார்.
இதுபற்றி இளஞ்செழியன் கூறுகையில், ‘குகேஷூக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், ‘செஸ்’ விளையாட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பழத்தில், அவரது உருவத்தை செதுக்கினேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்த போதும் பழங்களில் ஓவியங்கள் செதுக்கினேன். இளைஞர்கள் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் செலுத்த வேண்டும்.’, என்றார்.