ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு டிச. 21ல் திருக்குறள் போட்டி
தேனி: குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் தொடர்பான வினாடி – வினா போட்டி தேர்வு மாவட்ட அளவிலான டிச.,21ல் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த போட்டியில் 50 வினாக்கள் கேட்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடத்தப்பட உள்ளது. தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் 9பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
அரசு அலுவலகங்கள், அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்கள் துறை தலைவரிடம் பெயர் பதிவு செய்து தேனி சி.இ.ஓ., அலுவலகத்திற்கு ceothn@gmil.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிச.,18 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.