குடிநீர் கேட்டு ரோடு மறியல்
கம்பம்: ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து நாராயணத்தேவன்பட்டியில் பொதுமக்கள் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் பம்பிங் செய்து விநியோகிக்கின்றனர்.
ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக உறை கிணறுகள் வெள்ள நீரில் மூழ்கியது.
இதனால் குடிநீர் பம்பிங் செய்ய முடியவில்லை. இதனால் ஊராட்சியில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
தற்போது வெள்ள நீர் வடிந்ததால், குடிநீர் பம்பிங் செய்து விநியோகம் துவங்கி உள்ளது.
இதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் காமயக்கவுண்டன்பட்டி -சுருளி ரோட்டில் நேற்று காலை காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் செய்தனர்.
ராயப்பன்பட்டி போலீசார் பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.