பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு
தேனி, : நெல் சாகுபடியில்அதிக விளைச்சல் பெறும் விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம் என வேளாண்துறையினர் தெரிவித்தள்ளனர்.
நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டிற்கான போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயி 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.தொடர்ந்து 3 ஆண்டுகளாக நெல்சாகுபடி செய்திருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள், குத்தகைதாரர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
அரசு அங்கீகரித்த நெல் ரகங்கள் மட்டும் பயிர் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க ரூ.150 யை 2025 மார்ச்31க்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது தேனியில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகங்களை விவசாயிகள் நேரில் அணுகலாம். என வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.