Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: தேனி வடவீரநாயக்கன்பட்டி ரோடு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்உள்ளது.

இங்கு செயற்கை நகை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி ஏப்.,7 முதல் துவங்கி, 24 வரை நடக்க உள்ளது.18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது.

தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக்கடன் ஆலோசனை வழங்கப்படும்.விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் ஏப்.7க்கு முன் நேரில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர் கொள்ளலாம் என, பயிற்சி மையத்தின் இயக்குனர் ரவிக்குமார்தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *