கூடலுாரில் கொட்டப்பட்ட தென்னை கழிவுகள்; கேரளாவுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தல்
கூடலுார் : கேரளாவில் இருந்து தமிழகப் பகுதியான தேனி மாவட்டம் கூடலுாரில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட தென்னை கழிவுகளை மீண்டும் எடுத்துச் செல்ல விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சபரிமலை மண்டல கால உற்ஸவத்திற்காக கேரளாவில் இருந்து வியாபாரிகள் தமிழகப் பகுதிக்கு வந்து இளநீரை வாங்கி எருமேலி, பம்பை உள்ளிட்ட பகுதியில் வியாபாரம் செய்கின்றனர். இளநீர் விற்பனை செய்தவுடன் அதன் கழிவுகளை மீண்டும் லாரியில் ஏற்றி சமீபத்தில் கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கல்லுடைச்சான் பாறை அருகே விவசாய நிலங்களில் கொட்டிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் புகாரில் கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தென்னை கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார். ஆனால் கழிவுகள் அகற்றப்படாமல் அப்பகுதியிலேயே உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மீண்டும் கழிவுகளை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தி உள்ளனஇல்லாவிட்டால், விவசாய சங்கங்கள் சார்பில், ‘போராட்டம் நடத்துவோம்’ என எச்சரித்துள்ளனர்.
தென்னை கழிவுகளை எடுத்துச் செல்ல வலியுறுத்தல்
கூடலுார்: கேரளாவில் இருந்து வியாபாரிகள் தமிழகப் பகுதிக்கு வந்து இளநீரை வாங்கி எருமேலி, பம்பையில் வியாபாரம் செய்கின்றனர். இளநீர் விற்பனை செய்தவுடன் அதன் கழிவுகளை மீண்டும் லாரியில் ஏற்றி சமீபத்தில் கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கல்லுடைச்சான் பாறை அருகே விவசாய நிலங்களில் கொட்டிச் சென்றுள்ளனர். விவசாயிகள் புகாரில் கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தென்னை கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார். ஆனால் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மீண்டும் கழிவுகளை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால், விவசாய சங்கங்கள் சார்பில், ‘போராட்டம் நடத்துவோம்’ என எச்சரித்துள்ளனர்.