உலக தியான தின கருத்தரங்கம்
தேனி: உலக தியான தினத்தை முன்னிட்டு ‘ஹார்ட்புல்னெஸ்’ என்ற அமைப்பு சார்பில் தேனியில் உள்ள மஹாலில் கருத்தரங்கம் நடந்தது. டாக்டர்கள் ராஜேஸ் கண்ணன், ஜெகதீஸ், தங்கையாராஜா, சரவணன், பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலைய பயிற்றுநர் செந்தில்பாபு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
தினமும் மனநலமும், ஆன்மீகமும் உடல்நலமும், தியானத்தின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் விளக்கி கூறினர். கருத்தரங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியலதா, இனியவன் ஒருங்கிணைத்தனர்.