தேனியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் திறப்பு விழா
ஆண்டிபட்டி, டிச. 27: தேனி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகராட்சி முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் கபர் ஸ்தான் வடக்கு புறத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சுமார் ரூ.50 லட்சத்தில் சுற்று சுவர் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி நகர செயலாளர் நாராயண பாண்டியன், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.