நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு , நகராட்சிப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு அறுசுவை உணவு, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.எல்.ஏ., சரவணக்குமார், தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், தி.மு.க., நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், முன்னாள் தி.மு.க., நகரச் செயலாளர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.