மழைக்கால சித்த மருத்துவ முகாம் நாராயணதேவன்பட்டியில்
கம்பம், டிச. 12: கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து காய்ச்சல் தடுப்பு முகாம், பள்ளிக்குழந்தைகள் நலவாழ்வு முகாம் மற்றும் சித்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு காமய கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை சித்த மருத்துவர் சிராஜூதீன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.முகாமில் பள்ளி மாணவர்களுக்கு கபசுரக் குடிநீர்,நிலவேம்பு கஷாய பாக்கெட்டுகள் மற்றும் கற்றல் குறைபாட்டினை போக்கும் வல்லாரை மாத்திரைகள் மற்றும் நிலவேம்பு கஷாயம் பாக்கெட்டுகளாக வழங்கப்பட்டது. முகாமில் பள்ளி ஆசிரியர்கள் தனியார் தொண்டு நிறுவனர் பேச்சியப்பன் கிராம சுகாதார செவிலியர் தமிழ்க்கோதை உள்பட பலரும் கலந்து கொண்டார் கொண்டனர்.