பாலன் நகர் மக்கள் பரிதவிக்க வைக்கும் 2 அடி உயர பாதாள சாக்கடை மூடிகள் கவுன்சிலர்கள் ,அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதி
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலன்நகர் 2வது தெருவில் பாதாள சாக்கடை மூடிகள் 2 அடி உயரம் உள்ளது. சீரமைத்து தர கூறினால், ‘எங்கள் வார்டு இல்லை’ என, கவுன்சிலர்களும், ‘எந்த வார்டு’ என, அதிகாரிகளும் அலைக்கழிப்பதாக அப்பகுதியில் குடியிருப்போர் பரிதவிக்கின்றனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2, 3 வது வார்டுகளில் பாலன் நகரின் பல்வேறு தெருக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாலன் நகரில் உள்ள பல தெருக்களில் சாக்கடை வசதி இன்றியும், சேதமடைந்தும் உள்ளன. மழை பெய்தால் சாக்கடைகள் குளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் பாலன் நகர் பகுதிகளில் கொசுக்கடியால் அவதிப்படுவோரும், மருத்துவமனை செல்வோரும் அதிகம்.
திரும்பும் திசை எல்லாம் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 9 பேரை தெரு நாய்கள் கடித்து குதறின. ஆனாலும் அதனை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காயமடைபவர்கள் அதிகம்
ராஜகோபால், 2வது தெரு, பாலன்நகர்: இந்த தெருவில் 12 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் பாதாள சாக்கடை அமைத்தனர். ஆனால் பாதாள சாக்கடையின் உயரம் ரோட்டினை விட 2 அடி உயரமாக உள்ளது. இந்த மூடி அமைக்கப்பட்ட பகுதிகளில் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதில் தடுமாறி காயமடைபவர்கள் பலர். இதனால் உறவினர்கள் கூட வீட்டிற்கு வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. ரோட்டினை சீரமைக்கவும், பாதாள சாக்கடை மூடிகளின் உயரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
‘எந்த வார்டு’ என்று சொல்லுங்கள்
ராமகிருஷ்ணன், 2வது தெரு, பாலன்நகர்: தேர்தலின் போது ஒரு வார்டு எண்ணை கூறினார்கள். தற்போது, ‘ஒரு வார்டு’ என, கூறுகிறார்கள். பிரச்னைகளை கவுன்சிலர்களிடம் கூறினால், ‘எனது வார்டு இல்லை’ அந்தக் கவுன்சிலரிடம் கூறுங்கள்.’, என்கின்றனர். மற்றொரு கவுன்சிலரிடம் கூறினால், ‘அந்த தெரு எனது வார்டு இல்லை.’, என்கிறார். கவுன்சிலர்களை விடுத்து தெருவில் வசிப்பர்கள் இணைந்து நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தோம். அங்குள்ள அதிகாரிகளோ, ‘எந்த வார்டில் இருந்து வருகிறீர்கள்’ எனக் கேட்கின்றனர். இந்த தெருவிற்கு அவசர தேவைக்கு
நடந்து கூட செல்ல முடியாது. இரவில் தெருவிளக்குகள் கிடையாது. தடுமாறி விழுந்து எழும் நிலை தொடர்கிறது. சாக்கடைகளை துார்வாரவும், ரோட்டினை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.