ஹாக்கி மைதான சுற்றுச் சுவர் அமைக்கும் பணி துவக்கம்
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதான சுற்றுச்சுவர் தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியால் ரூ.12 லட்சத்தில் அமைக்கும் பணி துவங்கியது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி மைதானம் பகுதியில் அமைந்திருந்த சுற்றுச்சுவர் சில மாதங்களுக்கு முன் இடிந்து சேதமடைந்தது.
இந்த நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் ‘முதல்வர் கோப்பை’ ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டது.
சுவர் இன்றி மாணவர்கள் வேலியை தாங்கிப் பிடித்த சம்பவம் தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டி புகைப்படத்துடன் செய்தி கடந்த செப்.11ல் வெளியானது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையில் சுவர் அமைக்கும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன.