தேயிலை தோட்டத்தில் வரையாடு கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
மூணாறு: ராஜமலை அருகில் தேயிலை தோட்டத்தினுள் அபூர்வமாக நடமாடிய வரையாடுகளை பார்த்து சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிசயித்து சென்றனர்.
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன ‘வரையாடு’ ஏராளம் உள்ளன. அவற்றை காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலாப் பயணிகளை, வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அங்கு அவை மலை மீதும், புல்மேடுகளிலும் கூட்டமாக சுற்றித் திரிவதை காண முடியும்.
ராஜமலை பகுதியை தவிர வேறு பகுதியில் வரையாடுகளின் நடமாட்டத்தை காண இயலாது. இந்நிலையில் ஐந்தாம் மைலில் இருந்து ராஜமலைக்கு செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வரையாடுகள் அபூர்வமாக நடமாடின.
அவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிசயித்தனர்.