டாஸ்மாக் துவக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தேனி மாவட்டம், பூதிப்புரம் குமாரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பூதிப்புரத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மற்றொரு இடத்தில் புது கடையை துவக்க உள்ளனர்.
அருகே கிணறு, பெண்கள் கழிப்பறை, பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு கடையை துவக்கினால் இடையூறு ஏற்படும். கடை துவக்க அனுமதி வழங்கக்கூடாது என கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: கடையை துவக்க கலெக்டர் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளார். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: புது கடையால் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற மனுதாரரின் அச்சம் நியாயமானது. குறிப்பிட்ட இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை துவக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.