இலவச வேட்டி, சேலை ஒதுக்கீட்டை முழுமையாக வழங்க கோரிக்கை
தேனி: பொங்கல் இலவசவேட்டி, சேலைகள்ஒதுக்கீடு அளவுப்படி முழுமையாகவழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் இலவச பொருட்கள் வழங்கும் பணி இன்று துவங்குகிறது. இந்த பொருட்களுடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. இதற்காக இலவச வேட்டி, சேலை அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், போதிய அளவில் அவை வினியோகம் செய்யவில்லை என ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம் தெரிவிக்கின்றனர்.
அவர் கூறியதாவது: பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலை போதிய அளவு வினியோகிக்கவில்லை. கடந்தாண்டும் இதே போல் பற்றாக்குறை சப்ளை இருந்தது. தற்போது 40 சதவீதம் வரை குறைவாக வழங்கி உள்ளனர். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், வந்ததும் வழங்குவோம் என்கின்றனர். வேட்டி, சேலை வழங்காவிட்டால் பொதுமக்களுக்கு கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றனர்.