முள்வேலி போட்டு சாலையை தடுப்பதாக விவசாயிகள் புகார்
வருசநாடு, ஜன.1: மயிலாடும்பாறை அருகே கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகள் செல்லும் சாலையை தனிநபர்கள் முள்வேலிபோட்டு அடைத்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மயிலாடும்பாறை அருகே கிளியன்சட்டி செல்லும் சாலையை, விவசாயிகள் தினந்தோறும் மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்ததாகவும், மேலும் இப்பகுதிகளில் விவசாய நிலங்களில் விளைகின்ற பொருட்களான தக்காளி, முருங்கை, அவரை, தேங்காய், பீன்ஸ், கத்தரி, உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கும் வாகனங்களில் ஏற்றி செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வந்ததாகவும் திடீரென்று தனிநபர்கள் முள்வேலி அமைத்து வருவதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.