விளையாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான், சைக்கிள் போட்டி
தேனி : விளையாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு ஜன.4ல் சைக்கிள் போட்டியும், ஜன.,5ல் மாரத்தான் போட்டியும் நடத்தப்பட உள்ளது.
தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ஜன.,4ல் சைக்கிள் போட்டிகள் போட்டிகள் காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. பஸ் ஸ்டாண்டில் துவங்கி அன்னஞ்சி விலக்கு, வடபுதுப்பட்டி வழியாக மாவட்டவிளையாட்டு அரங்கை வந்தடை வேண்டும். போட்டியில் 13,15,17 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள், மாணவிகள் பிரிவில் தனித்தனியாக 10,15,20 கி.மீ., துாரத்திற்கு நடக்கிறது. பங்கேற்போர் சைக்கிள் உடன் வர வேண்டும். கியர், ரேஸ் சைக்கிள் அனுமதி இல்லை. பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
மரத்தான் ஓட்டம்
ஜன.,5ல் மாரத்தான் ஓட்டம் அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. இந்த ஓட்டத்தில் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கிறது.
இப் பிரிவில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையுடன் வர வேண்டும். பிறர் ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
பங்கேற்போர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கொண்டு வர வேண்டும். மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் போட்டிகள் துவங்கும் இடங்களுக்கு உரிய நேரத்தில் வர வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.