Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேனி நூலகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

தேனி, ஜன.1: தேனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலக இயக்ககம் இணைந்து மாவட்டமைய நூலகத்தில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலக அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் கலந்து கொண்டு, தேனி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற பெரியகுளம் ரெங்க கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாணவி ஆஃபியா சஹானாவிற்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழும், 2ம் இடம் பிடித்த பெரிய குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சிதாவிற்கு ரூ.3 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில், வாசகர் வட்ட நிர்வாகிகள் வக்கீல் முத்துராமலிங்கம், மனோகரன், இளங்குமரன், நீலபாண்டியன், சிதம்பரம், கற்பூரபூபதி, நூலக அலுவலக பணியாளர்கள் மற்றும் நூலகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நல்நூலகர் சவடமுத்து நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *