Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கேரள கழிவுகள் குமுளியில் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

கூடலுார் : தேனி மாவட்டம், கம்பம் வனத்துறையினர் தமிழகம்- – கேரளா எல்லையான குமுளி மலைப்பாதையில் ரோந்து சென்றனர்.

கேரளா பீர்மேடு அருகே பாம்பனாரைச் சேர்ந்த மினி லாரியில் ரப்பர் மற்றும் பாலிதீன் கழிவுகளை மலைப்பாதையில் கொட்ட முயன்றனர்.]

அதைக் கண்ட வனத்துறையினர் தடுத்து நிறுத்தி, வாகனத்தில் வந்த பாம்பனாரைச் சேர்ந்த சுபாஷ், தாமஸ் ஆகியோருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது: மீண்டும் இதுபோல செய்தால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட கழிவுகளுக்கு ஏற்றார்போல அபராதத் தொகை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *