32 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சின்னமனூர் : சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் 1992ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 82 பேர் பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளிச்செயலர் மாரிமுத்து, தலைவர் சிவமணி தலைமை வகித்தனர், தலைமையாசிரியர் முனிராஜா வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள் படித்த வகுப்பறைகளை பார்த்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தங்களுக்கு பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள் சிவமுருகேசன், பொன்னு ராமு, மாரியப்பன், விரியன் சாமி, திருப்பதி, வெங்கடாச்சலம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுப்பது என தீர்மானித்தனர்.
நிகழ்ச்சியில் 1992ல் எடுக்கப்பட்ட என்.சி.சி. புகைப்படம் தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்களை கொடியரசன் மற்றும் சுந்தரமூர்த்தி ஒருங்கிணைத்தனர்.